இவர்களின் வரலாற்றைக் கேட்டால் பூனை கூட புலியாகும்..!! எழுச்சி மிகு சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள்..!!
இந்தியா என்ற ஒரு
முழுமையான நாடு உருவாதற்கு முன்பே, ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்த
மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த்திறம், வீரம்
போன்றவைகளை கேட்டறிந்தால் பூனை கூட புலியாக மாறிவிடும். கோழை கூட வீரானாக
மாறி எழுச்சி பெறுவான். அந்தளவிற்கு இம்மண் வீரம் செறிந்தது.
இந்திய விடுதலைப்போராட்டத்தின் தொடக்கமாக கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க்கலகத்தைக் கூறலாம். உலக வரலாற்று அறிஞர்களும் இதையே இந்திய விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலமாக கருதுகின்றனர்.
வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என கூறிய தென்னாட்டு சிங்கங்கள் - மாவீரர்கள் பூலித்தேவன், கட்டபொம்மன், ஒண்டி வீரன் போன்றோரை நாம் அறிவோம்.
அக்காலத்தில் 'பாளையங்கள்' என்று சொல்லப்படுகிற பகுதிகளிருந்து பேரரசுகளுக்கு வரியாக நெல்லைக் கொடுப்பது வழக்கம். அவ்வாறு நெல்லை வரியாக கொடுத்ததால் அகப்பகுதி நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என்று அழைக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது.
நம் தென்னாட்டு வீர்ர்கள் வரிகட்ட மறுத்ததால், முகாலய மன்னர்களும், புதிதாக முளைந்திருந்த வெள்ளையர்களும் (கிழக்கிந்தியக் கம்பெனி) கி.பி. 1755 முதல் போரைத் தொடுக்க ஆரம்பித்திருந்தனர்.
இத்தகைய போரில் பாளையத்தின் எல்லையிலேயே நுழைய விடாமல் அவர்களை விரட்டியடித்தவர்கள் மன்னன் பூலித்தேவனம் மற்றும் அவரது தளபதி ஒண்டிவீரன்.
இந்தச் சூழ்நிலையில் பூலித்தேவன் மீது படையெடுப்பதற்கு, தென்மலை என்ற இடத்தில் வெள்ளையர்கள் முகாமிட்டிருந்தனர். மன்னின் படைகளைத் தாக்க வெள்ளையர்கள் வெடிமருந்து நிரப்பி மன்னர் படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வைத்திருந்தனர்.
இந்த திட்டத்தை தகர்த்து, அவர்களின் திட்டத்தை அவர்கள் மீதே திருப்பிவிட எண்ணினான் பூலித்தேவன். இந்த வேலையை செய்ய திறமையானவர் ஒருவர் உண்டு என்றால் அது ஒண்டிவீரன்தான் என்று முடிவெடுத்து அவரை வெள்ளையரின் படைகள் இருக்கும் முகாமிற்கு அனுப்பி வைத்தார் பூலித்தேவன்
மையிருட்டு இரவு வேளை.. எதிரி முகாமிருப்பதோ தென்மலை. வெள்ளைப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓராமக உள்ள மலைச்சரிவில் பதுங்கிக்கிடந்தான் ஒண்டிவீரன்.
எதற்காக?
மற்றர்களின் கண்களில் படாமலிருக்க தன் மீது இலைதழைகளை போட்டு இயற்கையோடு இயற்கையாக கலந்திருந்தான் ஒண்டி வீரன்..
அங்கு வந்த படைவீரனொருவன் குதிரை கட்டவதற்கு இரும்பாலான ஈட்டியை தரையில் குத்த , அது ஒண்டிவீரனின் கையைப் பதம்பார்த்து பூமியில் இறங்கியது. பூமிக்கும், ஈட்டிக்கும் நடுவில் கை. வழியும் ரத்தத்தோடும், வலியோடும், துடிதுடித்தார் ஒண்டி வீரன். நாட்டுக்காகவும், மன்னின் ஆணையை நிறைவேற்றவும் துளியும் அசையாமல் அத்தனையும் தாங்கி இருந்தான் ஒண்டிவீரன்.
எதிரியின் வீரர்கள் தூக்கத்தில் இருந்தபோது ஈட்டியை தன் கையிலிருந்து பிடுங்க முயன்றபோது அது முடியாமல் போகவே, கையிலிருந்த குறுவாளை எடுத்து தானே கையை வெட்டிக்கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்..
புயலுக்கு சவால்விடும் வேகத்தில் குதிரையைக் கிளப்பிக்கொண்டு வெங்கல நகராவை ஒலித்துவிட்டு புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்..
தூக்கத்தில் இருந்த வெள்ளைப் படைகள், எதிரிகள் வந்துவிட்டார்களென நினைத்து பீரங்கியை இயக்கியது. அப்போது பீரங்கிகள் அனைத்தும் தங்கள் முகாமின் மீதே வெடித்ததை கண்டு திகிலுற்றனர் ஆங்கிலப்படையினர். இதில் ஆங்கியே முகாம் மட்டுமல்ல.. ஆயிரக்கணக்கில் வெள்ளையர்களும் மடிந்தனர்.
மேற்காணும்
படம் கவிமணி தேசியவிநாயம்பிள்ளை வீட்டின் முன்பு எடுக்கப்பட்டது. படத்தில்
முறையே அறிஞர் அண்ணா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கவிமணி
தேசிவிநாயகம் பிள்ளை, உடுமலை நாராயண கவி (தமிழ் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள்)
இந்த மண்ணும், மணமும் தமிழனுக்கேச் சொந்தம்.. என எதிரிகளை விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767ல் மறைவெய்தினார்.
1771 ம் ஆண்டு வரையிலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பமான இருந்தார் மாவீரன் ஒண்டிவீரன். இந்த இடைப்பட்ட காலத்தில் பூலித்தேவன் குடும்பத்தினரையும் பாதுகாத்து வந்த ஒண்டிவீரனின் வரலாறு தென்மலைப் போரோடு முடிந்தாலும் அந்த மறவர்களின் நினைவுகளை இதுபோன்றதொரு சிறப்பு நாட்களிலாவது நினைவு கூர்வது நமது கடமையல்லவா?

நான்கு கவிஞர்கள் ஒன்று கூடி.. |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக